Posts

Showing posts from August, 2018
நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

கர்மா என்றால் என்ன?

நீ என்ன வினை செய்தாயோ அது நிச்சயம் உன்னை பின் தொடரும் கர்மா என்ற சொல்லில் அதுதான் உன் தலை விதி.

எப்படி வாழ வேண்டும் வாழ்க்கையை?

முடிந்தால் வாழ்ந்துகாட்டு நீ யார் என்று முடியவில்லையேல் உன்னை மாற்றிக்காட்டு இந்த உலகிற்கு நீ யார் என்று அப்பொழுது தெரியும் நீ ஒரு மனிதன் என்று.

எதை நாம் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும்?

காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி முன்னேறாத எவனும் எந்த காலத்திலும் முன்னேறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. 

எது நம் வாழ்வை உயரச்செய்யும்?

நீ வாழ்க்கையில்  உயர வேண்டும் என்றால் தினமும் என்னை சொல்லிப்பார் நான் வாழ்க்கையில் உயர்ந்து வருவேன் என்று பிறகு தெரியும் யார் உன்னை  உயர்த்தியது என்று எண்ணம் போல் வாழ்வு. 

எது நம் வாழ்க்கையை அழித்துவிடும்?

அடுத்தவர்களை குறை சொல்லி அடுத்தவர்களை கெட்டவர்களாக்கி அடுத்தவர்களை துன்பப்படுத்தி அடுத்தவர்களை ஏமாற்றி அடுத்தவர்களை நாசமாக்கி நாம் வாழும் வாழ்க்கை நம்மை அழிப்பது மட்டுமல்லாமல் நம் சந்ததியையும் அழித்துவிடும்.

எது நமக்கு வருத்தத்தை தரும்?

இருக்கும் போது தெரியாது யாருடைய அருமையும் இல்லாத போது தான் தெரியும்  அவர்கள் இல்லையே என்று சிறு தவறுகளுக்காக யாரையும் விட்டு விலகாதீர்கள் ஏனெனில் என்றாவது ஒரு நாள் அவர்கள் உதவி உங்களுக்கு தேவை படலாம் வாழ்க்கையின் எதாவது ஒரு சமயத்தில். 

எது உன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன?

உன் வெற்றியை நீ நிர்ணயிக்க முடியாது உன் திறமை தான் நிர்ணயிக்கின்றன, உன் தோல்வியை நீ நிர்ணயிக்க முடியாது உன் நேரமும் காலமும் தான் நிர்ணயிக்கின்றன. வெற்றி தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரம் அல்ல.

எது தன்னம்பிக்கை?

நீ விழும் போது உன்னை தூக்கி பிடிக்கும் கை நீ அழும் போது உன் கண்ணீரை துடைக்கும் கை நீ முடியாது என்று சொல்லும் போது உன்னால் முடியும் என்று சொல்லும் கை உன் கஷ்டத்தில் உனக்கு துணையாக இருக்கும் கை அதுதான் உன் தன்னம்பிக்கை அதை ஒரு போதும் உன் வாழ்வில் விட்டு விடாதே. வெற்றி நிச்சயம்.

காதல் வேஷம் என்றால் என்ன?

காதலிக்கும் போது தெரியவில்லை  நீ யார்  என்று தாலி கட்டிய பின்பு தெரிகிறது நீ ஒரு பத்தினி என்று இது உன்னுடைய தவறு அல்ல உனக்கு உண்மையாக இருந்தது என்னுடைய தவறு. 

காதல் வலி என்றால் என்ன?

என் கண்ணீருக்கு மட்டும் தான்  தெரியும் என் காதலின் வலி என்னவென்று என் காதலிக்கு தெரியவில்லை  இந்த கண்ணீர்க்கு சொந்தம் அவள் என்று.

எதை நாம் சொல்லக்கூடாது?

யாரிடமும் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள் ஏனெனில் இன்று நல்லவர்களாய் இருப்பவர்கள் நாளை எதிரியாக மாறலாம். இது நம் நட்பை இழக்க நேரிடும். 

எது காலத்தின் கட்டளை?

யாரையும் குறைத்து எடைபோடாதே ஏனெனில் யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது ஒரு நாள் நீ அவர் முன்னே கைகட்டி நிற்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் இதைத்தான் காலத்தின் கட்டளை என்பார்கள். 

பணம் என்றால் என்ன?

நீ இருக்கும் போது புரியவில்லை நீ யார் என்று நீ இல்லாதது போது புரிகிறது இது தான் உலகம் என்று இப்போது புரிகிறது  நீதான் பணம் என்று. 

எது ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன?

வாடாத பயிரும் வற்றாத நீர்வீழ்ச்சியும் காயாத நிலமும் ஓயாத மழையும் நல்ல அறுபடையும் வேலையின்மையும் நம்பிக்கையும் தான் ஒரு நாட்டின்  தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.

என்ன உலகிலே மிகசிறந்த சிற்றுண்டி இட்லியா?

Image
தமிழர்களே இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை இதோ சொல்கிறேன் கேளுங்கள் உலகில் மிக சிறந்த காலை சிற்றுண்டி இட்லி மற்றும் சாம்பார் என யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை பார்த்ததும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

தமிழன் என்பவன் யார்?

தன்னலம் பார்க்காமல் பிறர்நலம் பார்க்கும் பேரன்பும்; இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் இருப்பதை கொடுப்பதும் தேடி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் உள்ளதை உள்ளபடியே  பேசுபவன் தான் தமிழன். "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா". 

எதை நாம் பின்பற்றவேண்டும்?

எவன் தன் குற்றத்தை உணர்கிறானோ அவன் முன்னேறுகிறான் எவன் தன் குற்றத்தை மறைக்கிறானோ அவன் அழிகின்றான். இவைகளை காலம் தான் தீர்மானிக்கின்றன. 

யாரையும் நம்பாதே!

எவரையும் அவர் உருவத்தை வைத்து எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று. அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம். 

எது நம்மை அழித்துவிடும்?

எதிர் மறை சிந்தனை கொண்ட எவரையும் உன் அருகில் வைத்து கொள்ளாதே ஏனெனில் அது உன் வாழ்க்கையும்  நண்பர்களையும் அழித்து விடும். தகுதி மீறி கடன் வாங்குவதும் தகுதியற்றவரிடம் பழகுவதும் தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும் அளவற்ற சந்தேகமும் உன் வாழ்க்கையை அழித்துவிடும். ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ நாம் செய்யும் அனைத்து காரியமும் நம்மை அழித்துவிடும்.

இது தான் காதல் தோல்வியோ?

அன்பும் பிரிவும் உன்னை மறப்பதற்கு அல்ல  என் உயிர் உள்ளவரை நினைப்பதற்கே நீ காட்டிய பொய்யான அன்பு என்னை தனிமை படுத்தலாம் ஆனால் ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமே என்று கண்ணீர் விடலாம். புண் பட்ட மனதிற்கு தான் தெரியும் வலியின் வேதனை உன் நினைவுடன் எப்போதும் தனிமையாய் வாழ்கிறேன் நீ என்றாவது வருவாய் என்று. 

இது தான் நம்பிக்கை துரோகமோ!

உன் வறுமையை சொல்லி என்னிடம் பழகி என்னை ஏமாற்றினாயே! அது எனக்கு வலிக்கிறது ஏன் உன்னிடம் பழகினோம் என்று. நான் வருந்தவில்லை ஏனெனில் நான் வருந்துவதற்கு நீ தகுதியும்  இல்லை. உன்னிடம் இருந்த காலம் வரை உண்மையாக பழகியதற்கு நீ கொடுத்த பரிசு வேதனை மட்டுமே.

எது பயனற்றது இந்த உலகில்?

காலத்தால் பயிரிடாத நிலமும் காலத்தால் கல்லாத கல்வியும் காலத்தால் பார்க்காத வேலையும் காலத்தால் செய்யாத திருமணமும் காலத்தால் பெறாத குழந்தையும் காலத்தால் சேர்க்காத செல்வமும் யாருக்கும் பயனற்றது. காலத்தை வீணாக்காதே சிந்தியுங்கள் தோழர்களே.

இது தான் வறுமையோ?

குடிக்க கஞ்சி இல்லை படுக்க இடமும் இல்லை பழைய சட்டையணிந்து கையில் படித்த சான்றிதழை எடுத்துக்கொண்டு வேலைவாய்ப்பு  கேட்டுச்  சென்றேன் அவர்கள் சொன்னார்கள் முதலாளி வீட்டில் இல்லை இந்தா ஒரு ரூபாய் போய்விட்டு நாளை வா என்று. என் மனதில் தோன்றியது இது தான் உலகமோ என்று! கற்ற கல்விக்கு கொடுக்காத மதிப்பு  உடுத்தும் ஆடைக்கு உள்ளது. வருந்தினேன் ஏன் படித்தோம் என்று. 

அப்பாவின் கவலை

பிள்ளைகளை பெற்றதற்காக              பெருமை படுங்கள் வளர்த்ததற்காக வருத்தப்படுங்கள்...., 

ஏன் படித்தோம் என்று புரியவில்லை

நான் படிக்கும் போது தெரியவில்லை இது நல்ல படிப்பென்று நான் படித்த பின்பு தெரிகிறது ஏன் படித்தோம் என்று. நான் பயின்ற கல்வி என்  பையில் உள்ளது. அரசே ஏன் உனக்கு இது புரியவில்லையா.

எது அன்பு?

கடனாக இருந்தாலும் சரி அன்பாக இருந்தாலும் சரி திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு, இல்லையெனில் நீ அனாதையாவாய். 

எது தன்னம்பிக்கை?

ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே எதற்காய் பிறந்தோம் என்று என்னு சொல் உன்னால் முடியும் என்று இந்த உலகம் சொல்லும் நீ யார் என்று தமிழா எழு தளராமல் எழு. 

தாய் மற்றும் தந்தை என்றால் என்ன?

யாரும் சொல்லி கொடுக்காததை கற்று கொடுத்தது தந்தை யாரும் காட்டாத அன்பை கற்று கொடுத்து தாய் இவர்கள் இருவரும் தெய்வத்திற்கு நிகரானவர்கள்

இது தான் காதலோ?

பிரிந்து சென்ற ஆண்  பறவையே ஏனோ குடும்ப பாசம் என்னும் கல்லடி பட்டு விழுந்தாயோ உனக்காக காத்திருக்கும் இந்த பெண் பறவை மரணம் என்னும் கல் அடிபட்டு இறந்தது. 

தமிழை கற்பிப்போம் இந்த உலகுக்கு

செம்மையும் பழமையும் கொண்ட சிங்க தமிழே உன்னை வளர்க்க என் தமிழர்கள் பட்ட வேதனை இன்று உலகத்தால் போற்றப்படும் உலக சாதனை. நீ வளரும் இந்த வளர்ச்சி எல்லையற்ற எழுச்சி வாழ்க வளமுடன் தமிழே

தாய்ப்பாசம் என்றால் என்ன?

பெற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக்கு கொடுக்கும் இடம் முதியோர் இல்லம் பெற்று வளர்த்தவளுக்கு தான் தெரியும் பிள்ளையின் வலி..., 

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு