Posts

Showing posts from September, 2018
நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

நியதியின் தத்துவம்!

தன்னை அறிந்தவன் ஞானியாவான் உலகை அறிந்தவன் விஞ்ஞானியாவான். 

நட்பு என்பது எதைப்போன்றது?

நல்ல நட்பு என்பது ஒரு தராசு போன்றது ஏனெனில் அது கூடுவதும் குறைவதும் அதன் எடையை பொருத்துள்ளது. அதைப்போல தான் நமது நட்பும் நாம் பழகும் விதத்தில் தான் அமைந்துள்ளது அது நம்முடன் இருப்பதும்   நம்மை விட்டு பிரிவதும். 

எப்போது முடியாது என்று எதுவுமில்லை?

தளராத மனம் உள்ளவனுக்கு இந்த உலகில் முடியாது என்று எதுவுமில்லை. 

நாம் எதை போல வாழவேண்டும்?

நாம் முக்கனியைப் போல வாழவேண்டும் நம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் கடின உழைப்புடனும் அப்போது தான் வாழ்க்கை என்னும் வெற்றிக்கனியை பறிக்க முடியும். 

எது தானம் மற்றும் தர்மம்?

நிறைந்து வழிவதை நின்று கொடுப்பது தர்மம் எனக்கென உள்ளதை உனக்கென கொடுப்பது தானம்.

பிச்சை என்றால் என்ன?

யார் இல்லை என்று வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உன்னிடம் இருப்பதைக்கொடு ஏனெனில் நீ செய்யும் சிறு தானமும் தர்மமும் பலரின் பசியை போக்கலாம்.

எதிர்மறை சிந்தனையை நீக்கு

என்னடா வாழ்க்கை என்று வாழ்வதை விட இந்த வாழ்க்கைக்கு என்ன குறையடா என்று வாழ்ந்துபார் தெரியும் வெற்றி யார் பக்கம் உள்ளது என்று.

காதல் மற்றும் காமம் என்றால் என்ன?

காதல் என்பது எல்லாருக்கும் பொதுவானது அது வயதில் வந்தால் காதல் என்பர் அது வாலிபத்தில் வந்தால் காமம் என்பர் அது வயதாகி வந்தால் வக்கிரம் என்பர்.

எதை நாம் அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும்?

உலகிலேயே மிகக்கொடிய உறுப்பு நாக்கு ஏனெனில் அது சொல்லும் வார்த்தைகள் சிலரை உயிருடன் சாகடிக்கிறது அதை எவன் அடக்கி ஆள கற்றுக்கொள்கிறானோ அவன் இந்த உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். 

எதை நாம் இழந்தால் திரும்ப பெறமுடியாது?

என்றைக்குமே நினைவில் வைத்துக்கொள் நம் வாயிலிருந்து வரும் வார்த்தையும் நாம் செலவு செய்யும் நேரத்தையும் நம் தாய் மற்றும் தந்தையையும் நம் வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெறமுடியாது. 

எது நல்ல நட்பை இழக்கச் செய்கிறது?

உலகில் நண்பர்களை  பிரிக்க முடியாத ஒரு சொல் நட்பு அந்த நட்பினையும் பிரிக்க கூடிய ஒரு சொல் தான் துரோகம் என்பது அது நம்மை வெறுத்தவர்களிடம் இருந்து வருவதில்லை நம்மை அதிகம் நேசித்தவர்களிடம் இருந்து தான் வருகிறது.

நாம் எப்படி வாழவேண்டும்?

நம்முடைய பிறப்பு சாதாரணமாக  இருக்கலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் அது தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம். 

எது நம் வாழ்வில் பயனற்றது?

கற்ற கல்வியையும் சேர்த்த செல்வத்தையும் சரியாக பயன்படுத்த தெரியாதவன் கண் இருந்தும் குருடனுக்குச் சமம் ஆவர். 

எது உறவுகளில் பொய்யானது?

புரியாமால் பிரிந்து சென்ற அன்பு புரியும் போது நம்முடைய உறவுகள் நீடிப்பதில்லை. ஏனெனில் இனி வந்தாலும் அந்த நட்பு பொய்யானதென்று.

எது நம் வாழ்க்கைக்கு முக்கியம்?

நம் உயர்வுக்கு ஒன்று தான் காரணம் அது நம்முடைய எண்ணம் நம் தோல்விக்கு ஒன்று தான் காரணம் அது நம்முடைய முயற்சியின்மை. நம்முடைய படிப்பிற்கு ஒன்றுதான் காரணம் அது நம்முடைய கடின உழைப்பு நம் வீழ்ச்சிக்கு ஒன்று தான் கரணம் அது நம்முடைய பேச்சு. நம் நட்பிற்கு ஒன்று தான் காரணம் அது நம்முடைய செயல். நம் இறப்பிற்கு ஒன்று தான் காரணம் அது நம்முடைய வயது.

எது நம் வாழ்க்கைக்கு அர்த்தமற்றது?

அன்பு உள்ளவரை அம்மா பாசம் உள்ளவரை நட்பு காதல் உள்ளவரை மனைவி பணம் உள்ளவரை சொந்தம் மானம் உள்ளவரை மதிப்பு  இவை அனைத்தையும் எப்போது இலக்கிறாயோ பிறகு நீ வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது.

எது நம் உயர்வுக்கு காரணம்?

நாம் எப்படி வரவேண்டும் என்று நாம் முடிவு செய்யக் கூடாது நம்முடைய எண்ணம்  தான் அதை முடிவு செய்கின்றன ஏனெனில் எண்ணம் போல் வாழ்வு

எது காதல் இல்லை?

கண்கள் பார்த்து கண்கள் பேசி  காலங்கள் காத்திருந்து இரு உள்ளங்கள் இணைந்து வருவது காதல் இதை புரியாமல் வருவது காதல் இல்லை இச்சையில் வரும் காமம் என்பர்.

எதை நாம் வாழ்வில் சொல்லக்கூடாது?

என்றைக்குமே உச்சரிக்காதே என்னால் மட்டும் தான் முடியும் என்று ஏனெனில் நான் என்று சொல்கிறவன் அழிகின்றான் நாம் என்று சொல்கிறவன் உயர்கின்றான்.

எது வாழ்க்கைக்கு உகந்தது?

பிறர் என்ன சொல்கிறார்கள் என்று நினைத்து வருந்துவதை விட நம் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதே நம் வாழ்க்கைக்கு சிறந்தது.

விவசாயின் வேதனை!

நீ எப்போது வருவாய் என்று ஏங்கி நின்றேன் நீ வரவில்லை என் நிலம் வறண்டது நீ வரவில்லை என் கண்ணில் நீர் கொட்டியது நீ வரவில்லை இப்போது என் இனம் அழிந்தது  நீ வந்தாய் மழையாய் யாருக்கும் பயனின்றி இப்போது புரிகிறதா விவசாயி படுவது வேதனை என்று.

காதலில் சந்தேகமா?

உன்னை தவிர வேறு யாரும் இல்லையே  என்று எண்ணிய எனக்கு ஏனோ தெரியவில்லை  என் மனம் அழுகிறது, உன்னை விட்டு விலகக்கூடாதென்று ஏனெனில் உன்னுடைய வெகுளித்தனமான அன்பு என்னை கட்டிபோடுகிறது! இதை எப்படிச் சொல்லி புரியவைப்பேன் உனக்கிருப்பது சந்தேகம் என்று.

கணவர்கள் ஜாக்கிரதை :-)

நான் போனில் பேசும் போது தெரியவில்லை நீ யார் என்று நேரில் பார்க்கும் போது தெரிகிறது நான் பேசியது என் மணைவியுடன் என்று. 

இது தான் காதல் ஏமாற்றமோ?

உன் முகநூலை பார்த்தவுடன் தெரியவில்லை இது உன் முகநூல் என்று ஆனால் உன் முகத்தை பார்த்தவுடன் தெரிகிறது நீ ஒரு உத்தமி என்று. 

எது நல்லது கெட்டது?

கிடைத்ததை வைத்து வாழத்தெரிந்தவன் புத்திசாலி கிடைக்காததற்காக ஆசைப்படுபவன் முட்டாள் இவன் வாழ்வதும் பயனற்றது. 

தன்மானம் என்றால் என்ன?

எதுக்காகவும் யாருக்காகவும் நீ தலைகுனியாதே ஏனெனில் இந்த உலகில் மிக உயர்ந்த சொல் இருக்கிறது தன்மானம் என்று.

எது நட்பன்று?

சில நண்பர்கள் நம்மை காலில் அணியும் செருப்பைப் போல் பயன்படுத்துகிறார்கள் ஏனெனில் யார் வீட்டுக்கு நாம் சென்றாலும்  முதலில் செருப்பைத் தான் வாசலில் கழட்டிவிட்டுச்  செல்கிறோம். அதைப் போலதான் சிலரின் நட்பும் தேவை முடிந்தவுடன் விட்டு விலகுகிறார்கள். 

எது வாழ்க்கை?

காலண்டரில் உள்ள  தேதியை கிழிக்கும் முன் ஒரு முறை யோசித்துப்பார் புரியும்  நீ கிழித்தது தேதியை அல்ல உன் வாழ்க்கையின் ஓவ்வொரு  நாளென்று இழந்தால் திரும்ப வராது. 

சீனா பெண்ணின் அழகான தமிழ் பேச்சு காணொளி

Image
எல்லோருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இந்த காணொளியை பாருங்கள் சீனா பெண்ணின் அழகான தமிழ் உச்சரிப்பும், தமிழ் மீது கொண்ட ஆர்வமும்.  நான் தமிழன் என்று சொல்ல வியக்கிறேன். தயவு செய்து இந்த காணொளியை எல்லாரிடமும் பகிரவும். உங்களுக்கு இந்த காணொளி பிடித்து இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும். 

காதல் தோல்விக்காக வருந்தாதே!

நீ பிரிந்ததாலோ என்னவோ என்று எனக்குத் தெரியவில்லை நான் வாழ்க்கையில்  உயர்ந்துவிட்டேன் ஏனெனில் உன்முன் வாழ்ந்துகாட்ட வேண்டும்  என்பதற்காக. 

எது காதலுக்கு உகந்தது?

பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிச் சென்றவர்களிடம் போய் அவர்களுக்கு பிடித்தாற்போல்  செய்து அவர்களை பிடிக்க வைப்பதை விட உங்களை பிடித்தவர்களின் பின்னால் சென்று அவர்களுக்கு பிடித்தாற்போல் செய்வது உங்களுடைய வாழ்க்கைக்கு உகந்தது.

காமம் என்றால் என்ன?

நீ பக்கத்தில் இருக்கும்  போது  தெரியவில்லை நான் செய்தது என்னவென்று உன் வாந்தியை பார்த்தவுடன் தெரிகிறது இதற்குப் பெயர் தான் காமம் என்று.

பணம் இல்லையா?

பணத்துடன் இருந்து பார் பாசம் தெரியும் பணத்துடன் இருந்து பார் சொந்தம் தெரியும் பணத்துடன் இருந்து பார் நட்பு தெரியும் பணத்துடன் இருந்து பார் காதல் தெரியும் ஆனால் பணம் இல்லாமல் இருந்து பார் நீ யார் என்று இந்த உலகுகிற்கே தெரியும்.

அளவோடு பழகு

யார் மீதும் அதிக அன்பு காட்டாதே ஏனெனில் நேசித்த இதயம் உன்னை வெறுத்துவிட்டால் பிறகு கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. 

பிரிவு என்றால் என்ன?

ஏன் பிரிந்தோம் என்று வருத்தப்படுவதை விட நல்லவேலை அவளிடம் இருந்து தப்பித்துக் கொண்டோம் என்று சந்தோச படுவதே மேல் ஏனெனில் பழகும் போது புரியவில்லை  அவளிடம் காதல் இல்லை காமம் தான் உள்ளது என்று.

நட்பு என்றால் என்ன?

உண்மையாக பழகினால் உயிரைக்கொடு நேர்மையாக பழகினால் தைரியம் கொடு பசி என்று வந்தால்  உணவு கொடு அன்போடு வந்தால் அடைக்கலம் கொடு அழுது கொண்டு வந்தால் ஆதரவு கொடு ஆனால் உன்ன்னிடம் பழகிவிட்டு துரோகம் செய்தால்  உயிரை எடு.

மரணம் என்றால் என்ன?

அஞ்சாதவன் கூட அஞ்சுவான்  இவன் பெயருக்கு இவன் வந்தால் என்ன செய்வான் என்று தெரிவதில்லை பலருக்கு இவன் வந்தாலும் கேட்கமுடியாது இவன் கொடுத்தலும் தடுக்க முடியாது இப்போது புரிகிறதா இவன் தான் மரணம் என்று.

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு