Posts

Showing posts from November, 2019
நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
நன்றி இல்லாதவனை  நினைத்து வேதனைப்படுவதை விட நன்றியுள்ளவனை நினைத்து சந்தோசப்படுவதே மேல். 
பணத்திற்காக பழகுபவனிடம் உண்மை இருக்காது குணத்திற்காக பழகுபவனிடம் பொய் இருக்காது. 
பெற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கொடுக்கும் இடம் முதியோர் இல்லம். 
அழகைப் பார்த்து வருவது காதலில்லை அன்பைப் பார்த்து வருவது தான் காதல். 
வாழ்க்கையில் நான் என்று சொன்னால் வாழவிடாது. நாம் என்று சொன்னால் வாழவைக்காமல் விடாது. 
தன்னைத்தானே புத்திசாலி என்று நினைத்துக்கொள்பவன் சமுதாயத்தில் பிறரால் முட்டாளாக்கப்படுகிறான். 
சாதிக்கத் தெரிந்தவனுக்கு ஜாதகம் எதற்கு போதிக்கத் தெரிந்தவனுக்கு புத்தகம் எதற்கு!
ஒரு மனிதனை முடிவுசெய்வது அவனுடைய குணமல்ல அவன் வைத்திருக்கும் பணம்
வாழ்க்கையில் பொறுமையுடன் இருந்தால் வெற்றி கிடைக்கும். பொறாமையுடன் இருந்தால் தோல்வி கிடைக்கும்.
தவறே செய்யாதவனை தண்டிப்பது நியாயமற்றது. தவறு செய்தவனை தண்டிக்காமல் விடுவது நீதியற்றது. 
உன் அதிகாரத்தை கெட்டவர்களிடம் காட்டு உன் அன்பை நல்லவர்களிடம் காட்டு நீ வாழ்வில் உயர்வாய். 
இறைவன் கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது இறைவன் எடுக்க நினைப்பதை எவராலும் கொடுக்க முடியாது இதுதான் உலக நியதி. 
பிறர் பிரச்சனையை வைத்து சம்பாதிக்க நினைப்பவன் தன் பிரச்சனையை மறந்துவிடுகிறான்.
போராட்டம் இருந்தால் தோல்வி இருக்காது. போராடாமல் இருந்தால் வாழ்க்கை இருக்காது. 
கடந்த காலத்தை மறந்துவிடு நிகழ்காலத்தை நிவர்த்திசெய் வரும் காலத்தை வரவேற்றுக்கொள். 
மதம் பிடித்த யானையாக இருக்காதே உதவி செய்யும் நீர் யானையாக இரு. 
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு உண்மையை மறைக்கலாம். ஆனால் ஒரு உண்மை போதும் ஆயிரம் பொய்யை மறைக்க! ஏனென்றால் பொய் வாழவிடாது உண்மை சாகவிடாது. 
என்றும் நினைவில்கொள் காசுள்ளபோது வரும் சொந்தமும் காசில்லாத போது வரும் பந்தமும் என்றுமே நிலைக்காது.
பிறர் நம்மை பார்த்து சிரிக்கும்படி வாழக்கூடாது. பிறர் நம்மை பார்த்து சிந்திக்கும் படி வாழவேண்டும். 
எப்போதும் நினைவில்கொள் காலண்டரில் கிழித்த தேதியையும் இழந்த நாட்களையும் கைவிட்டு போன காதலையும் இழந்தால் திரும்ப பெறமுடியாது. 
அந்த காலத்தில் ஒருவருடைய குணத்தை பார்த்து பழகினார்கள். இந்த காலத்தில் ஒருவருடைய பணத்தை பார்த்து பழகுகிறார்கள். 
இழந்ததை நினைத்து வருத்தப்படுவதை விட இருப்பதை நினைத்து சந்தோசப்படுவதே மேல். 
நன்றி மறந்தவர்களிடம் நன்றியை எதிர்பார்ப்பதைவிட நன்றியுள்ளவர்களிடம் நாயாக இருப்பதே மேல்.

எந்த செயலை யாரிடம் காட்ட வேண்டும்?

உன் அதிகாரத்தை கெட்டவர்களிடம் காட்டு உன் அன்பை நல்லவர்களிடம் காட்டு உன் வாழ்க்கை உயரும். 

எப்படி வாழக்கூடாது?

நன்றாக  வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் வாங்கக் கூடாது. இரண்டு சாபமும் பிச்சையும் ஏனென்றால் இவை இரண்டும் நம்மை வாழவிடாது. 

எப்படி வாழ வேண்டும்?

பிறர் நம்மை மண்ணிக்கும் படி வாழக்கூடாது. பிறர் நம்மை வாழ்த்தும் படி வாழவேண்டும். 

நல்லவனா அல்லது கெட்டவனா!

ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதனை அவனுடைய முகத்தைப் பார்த்து முடிவு செய்யாதே அவனுடைய குணத்தைப்  பார்த்து முடிவுசெய். ஏனென்றால் சிலநேரம் நடிப்பவர்கள் முகமும் நல்லவனைப் போல் இருக்கும்.

எது தவறு?

ஒருவரை மண்ணிப்பது  தவறில்லை. ஆனால் மண்ணிக்கும் அளவிற்கு அவன் நடந்து கொள்ளாதது தவறு. 

எது நம்மிடம் கடைசி வரை வரும்?

நட்பு என்பது நம்மிடம் பணம் இருக்கும் போது மட்டும் வரும். ஆனால் ஒருவரின் நல்ல குணம் நாம் இறந்த பின்பும் வரும். 

பணமா அல்லது குணமா!

பணத்தை பார்த்து பழகாதே ஒரு நல்ல மனிதரின் குணத்தை பார்த்து பழகு. 

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு