Posts

Showing posts from December, 2019
நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எதிர்பார்ப்போடு பழகுபவனிடம் உண்மை இருக்காது எதிர்பார்ப்பில்லாமல் பழகுபவனிடம் பொய் இருக்காது. 
நம் வாழ்வில் கிடைக்காத ஒன்றிற்கு ஆசைப்படுவதை விட கிடைத்த ஒன்றிற்காக சந்தோசப்படுவதே மேல். 
ஆயிரம் புத்தகம் சொல்லிக்கொடுக்காத ஒன்றை கூட இருந்த நண்பர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்  நம்பிக்கை துரோகம் என்றால் என்னவென்று!
வாழ்க்கையில் நினைத்தது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை நினைத்தது போல் ஏற்றுக்கொள் அதன் வாழ்க்கை. 
அடுத்தவரைப் போல் நீ வாழவேண்டும் என்று நினைக்காமல் உன்னைப்போல் பிறர் வாழ வேண்டும் என்று நினை வெற்றி உன் பக்கம்.
எவன் ஒருவன் தன்னுடைய ரகசியத்தை பிறருடன் பகிர்கிரானோ அவன் நிச்சயம் பிறரால் தோற்கடிக்கப்படுவான். 
உன் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றியை காட்டு ஒருபோதும் அவர்களுக்கு நம்பிக்கை துரோகத்தை காட்டாதே!
கிடைத்த வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்பவன் ஜெயிப்பான் அதே கிடைத்த வாழ்க்கையை தவறவிடுபவன் தோற்பான். 
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒருவரை முட்டாளாக்கலாம் ஆனால் ஒரு உண்மை போதும் அவர் புத்திசாலி என்று சொல்வதற்கு 
நம் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியை நிச்சயம் எவராலும் தட்டிப்பறிக்க முடியாது. 
நாம் செல்லும் வழி சரியானதாக இருந்தால் நாம் சேரும் இடமும் சரியானதாக இருக்கும். 
அன்பால் ஜெயிக்க முடியாத ஒரு விஷயத்தை நிச்சயமாக வம்பால் ஜெயிக்க முடியாது. 
நாம் எப்போதும் போலியான உறவுகளைச் சுற்றி இருப்பதை விட தனிமை எப்போதும் இனிமை 

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு