கூடவே இருந்து துரோகம் செய்யும் நண்பனை நம்புவதைவிட தூரத்திலிருந்து துரோகம் செய்யும் எதிரியை நம்பு ஏனென்றால் சிலநேரம் தூரத்திலிருந்து துரோகம் செய்பவன் மறந்துவிடுவான் ஆனால் கூடவே இருந்து துரோகம் செய்பவன் அதனை தொடருவான்
எப்போதும் நினைவில்கொள் நீ பணம் கொடுத்தால் உன்னிடம் நண்பனாகவும் நீ பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னிடம் எதிரியாக மாறுபவன் நிச்சயமாக உன் நண்பனாக இருக்கமாட்டான் அவன் தான் உன் எதிரி.
எவரையும் அவர் உருவத்தை வைத்து எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று. அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம்.